news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வெனிசுலாவில் எட்டு நாட்களுக்குப் பிறகு ஒருவர் உயிருடன் மீட்பு
tv

Also Watch

வெனிசுலாவில் எட்டு நாட்களுக்குப் பிறகு ஒருவர் உயிருடன் மீட்பு

பலி எண்ணிக்கை 2,600 ஆக உயர்வு

10

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஒருவர் உயிருடன் மீட்பு

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 600ஆக உயர்ந்துள்ளது.

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்
இந்நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கிய ஒருவர் எட்டு நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 24 அன்று ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ஒட்டுமொத்த நாடும் நிலைகுலைந்தன. இதில், லா குவைராவில் (La Guaira) உள்ள 7 அடுக்கு வணிக வளாகம் தரை மட்டமாகியதில், 43 வயதான பாதுகாப்பு காவலர் ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கினார். இந்நிலையில், மீட்புப் பணியின் போது சென்சார் கருவிகள் மூலம் ஒருவர் உயிருடன் இருப்பதைக் கண்டறிந்து மீட்புக் குழுவினர் அவரை பத்திரமாக மீட்டனர்.

அரபு நாடுகளுக்கு வெப்ப அலை எச்சரிக்கை
ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் வெப்ப அலை மக்களை வாட்டி வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு அடுத்த 40 நாட்களுக்கான வெப்ப அலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜூலை 3ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை அரபு நாடுகளில் 50 டிகிரி செல்சியஸ்-க்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. கடற்கரையோர பகுதிகளில் அதிகபட்சமாக 43 டிகிரி செல்சியஸ் வரையிலும், மற்ற பகுதிகளில் கூடுதல் வெப்பநிலை பதிவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாட்டு?
உக்ரைன் படைகளின் பதில் தாக்குதலால் ரஷ்யாவின் எரிசக்தி உள் கட்டமைப்பில் பாதிப்பு ஏற்பட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து கடல் வழியாக 6 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோலை இறக்குமதி செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது. அதேபோன்று பிற நட்பு நாடுகளிடமும் நியாயமான முறையில் பெட்ரோலை வாங்கும் முனைப்பில் ரஷ்யா ஆர்வம் காட்டி வருகிறது. ரஷ்யாவில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Related Link
புவித்தட்டுகள் இணையும் எல்லை, வெனிசுலா சந்தித்த நிலநடுக்கம்

புவித்தட்டுகள் இணையும் எல்லை, வெனிசுலா சந்தித்த நிலநடுக்கம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பக்கம் சாய்கிறாரா செந்தில் பாலாஜி?

11
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved