news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அனிதா ராதாகிருஷ்ணன் கைது, உதயநிதி கண்டனம்
tv

Also Watch

tv

Read this

அனிதா ராதாகிருஷ்ணன் கைது, உதயநிதி கண்டனம்

எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கைது நடவடிக்கைகளால் திமுகவை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த ரீல்ஸ் அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

அனிதா ராதாகிருஷ்ணன் கைது
இதுதொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காவல் துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் - ஒழுங்கை மீட்டெடுக்க காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி எம்எல்ஏவை கைது செய்வதில் காட்டியிருக்கிறது சோஃபா மாடல் அரசு.

எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது
அவதூறு பேசி, பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும் தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். பொய் வழக்காலும் கைது நடவடிக்கைகளாலும் திமுகவை முடக்கலாம் என்று நினைக்கும், இந்த ரீல்ஸ் அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

திமுக எம்பி கனிமொழி கண்டனம்
இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி கூறி இருப்பாதவது;
முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணனை, தவெக அரசின் காவல் துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சி எம்எல்ஏ, தனது தொகுதியில் ஆய்வுப் பணியில் இருக்கும்போது, அராஜகமான முறையில் அவரை கைது செய்து உள்ளது, இந்த தவெக அரசு. இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் ஒருபோதும் திமுக அடி பணியாது.
இவ்வாறு கனிமொழி எம்பி கூறி உள்ளார்.

Related Link
ஆணவம் அழிவிற்கு வழி என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம்

ஆணவம் அழிவிற்கு வழி என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூர் சம்பவம், ஆதவ்-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

4
18 mins agoshare
உச்சநீதிமன்றத்தில் திமுக மனுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau