news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கரூர் சம்பவம், ஆதவ்-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு
tv

Also Watch

கரூர் சம்பவம், ஆதவ்-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

முதல்வர், அமைச்சர்கள் பேச தடைகோரி மனு

27

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கரூரில் காவல்துறை மூலம் 41 பேரைக் கொன்றது திமுக என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசிய விவகாரத்தில், விசாரணை முடியும் வரை கரூர் விவகாரம் குறித்து பேச முதலமைச்சர், அமைச்சர்களுக்கு தடை விதிக்கக்கூறி உச்சநீதிமன்றத்தில் திமுக மனுத்தாக்கல் செய்துள்ளது. கரூர் துயரச் சம்பவ வழக்கின் விசாரணையை பாதிக்கும் வகையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளதாக திமுக குற்றம் சாட்டி உள்ளது. ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐ வழக்குப் பதிந்து விசாரிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் திமுக மனு
"கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜுனாவின் மரியாதையற்ற பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவில், ‘கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அமைச்சர் அதாவ் அர்ஜுனா ஆற்றிய பொறுப்பற்ற, தவறான, தீய நோக்கம் கொண்ட மற்றும் மரியாதையற்ற பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்’ எனக் கோரப்பட்டு உள்ளது.

திசை திருப்பும் முயற்சி
மேலும், ‘ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு, திமுக, அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காவல் துறைக்கு எதிராக ஒரு பொய்யான கதையை உருவாக்குவதோடு, ஒரே நேரத்தில் பொதுமக்களின் கருத்தை திசை திருப்பவும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி நடத்தப்படும் ஒரு விசாரணையில் தலையிடவும் முயல்கிறது’ என சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

Related Link
ஆளுநர் ஆய்வை ஏற்க முடியாது - தமிழக அரசு திட்டவட்டம்

ஆளுநர் ஆய்வை ஏற்க முடியாது - தமிழக அரசு திட்டவட்டம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பள்ளி அனுமதிக்காக லஞ்சம் வாங்கியதாக அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved