news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பணி நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு நீடிப்பு ஆணைகள்
tv

Also Watch

tv

Read this

பணி நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு நீடிப்பு ஆணைகள்

கொண்டிச்செட்டிப்பட்டி, நாமக்கல்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நாமக்கல்

நாமக்கல் அருகே கொண்டிச்செட்டிப்பட்டியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2026-2027 ம் ஆண்டுக்கான தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியில் உள்ள 86 உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நாமக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பச்சமுத்து தலைமையில் கலந்தாய்வு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டன.

தொடர்ந்து, பணி நிரவல் கலந்தாய்வுக்கு மாவட்டம் முழுவதும் இருந்து 80 க்கும் மேற்பட்ட இருபால் ஆசிரியர்களும் வந்திருந்தனர். இந்த பணி நிரவல் கலந்தாய்விற்கு டிட்டோஜாக் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் கலந்தாய்வு நடைபெறவில்லை.


இதனையடுத்து தொடக்ககல்வி அலுவலர் பச்சமுத்து மற்றும் அலுவலர்கள் ஆசிரியர்கள் கலந்தாய்விற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியர்கள் அமைப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். அப்போது நாமக்கல் மாவட்டத்தின் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 30-06-26 ம் நாள் பணி நிறைவு ஆசிரியர்களுக்கு பணி நீடிப்பு ஆணைகள் வழங்கிய பின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு பணியிட நிரவல் கலந்தாய்வு மேற்கொள்ள வேண்டும்.

இன்று நிர்வாக ரீதியான கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிமேல் அலுவல் வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிய பின்னரே கலந்தாய்வு நடத்த வேண்டும் என டிட்டோஜாக்-வினர் வலியுறுத்தியுள்ளதால் பணி நிரவல் ஆசிரியர்களின் கலந்தாய்வு நடைபெறாததால் கலந்தாய்விற்கு வந்த இருபால் ஆசிரியர்கள் பலமணி நேரமாக காத்திருந்து வருகின்றனர்.

Related Link
பள்ளிக்கு வராத 3 வடமாநில சிறுமிகள் மீட்ட போலீசார்

பள்ளிக்கு வராத 3 வடமாநில சிறுமிகள் மீட்ட போலீசார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

லோகேஷ் படத்தின் சூப்பர் அப்டேட்

0
14 mins agoshare
Cini snacks








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau