Also Watch
Read this
By: Web Team

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வீட்டில் இருந்து காணமல் போன 3 வயது பெண் குழந்தை, சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோளக்காட்டில் இருந்து மறுநாள் காலை மீட்கப்பட்டது. நயினார் பாளையம் கிராமத்தை சேர்ந்த ஹரிஹரன் என்பவரது 3 வயது மகள் கிருத்திஷா, திடீரென காணாமல் போன நிலையில் வீட்டை விட்டு வெளியேறி வயல்வெளி பகுதிக்கு சென்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள சோளக்காட்டிற்குள் குழந்தை அழுதபடி நின்றிருந்ததாக, அந்த காட்டின் உரிமையாளர் அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved