Also Watch
Read this
Posted on: Feb 24, 2026 06:58 AM
By: Fyrose Banu

ஆத்தூர் அருகே கொத்தாம்பாடியில் இருசக்கர வாகனத்தின் மீது அரிசி ஏற்றி சென்ற சரக்கு வாகனம் மோதிய விபத்தில் லேசான காயத்துடன் இரண்டு வாகனத்தின் ஓட்டுநர்கள் உட்பட இருவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். கொத்தம்பாடி பகுதியில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சின்னசேலத்தில் இருந்து சேலம் மல்லூர் நோக்கி அரிசி ஏற்றுக் கொண்டு சென்ற சரக்கு வாகனம் (பொலிரோ பிக் அப் ) முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
லேசான காயத்துடன் உயிர்தப்பிய ஓட்டுநர்கள்
இதில் இரு சக்கர வாகன ஓட்டி கீழே விழுந்த நிலையில் அவர் மீது வாகனம் ஓதாமல் இருக்க ஓட்டுநர் சரக்கு வாகனத்தை திருப்பியபோது எதிர்பாராத விதமாக தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு சுவரின் மீது மோதி எதிர் திசையில் சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்ற சுரேஷ் மற்றும் இருசக்கர வாகன ஓட்டியும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.
சாலையில் கொட்டிய அரிசி மூட்டைகள்
இந்த விபத்தில் சாலையின் நடுவே சரக்கு வாகனத்தில் இருந்த அரிசி மூட்டைகள் கொட்டியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரக்கு வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved