news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பிரியாணி கடையில் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு
tv

Also Watch

tv

Read this

பிரியாணி கடையில் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு

அண்ணா நகர், சென்னை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரியாணி கடையில்  தீ

சென்னை அண்ணா நகர் டவர் பார்க் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெளியே அமைந்துள்ள பிரபல 'அபு பாய் பிரியாணி' கடையில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவியது.

வழக்கம் போல் கடையின் செயல்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கடையில் தீப்பிடித்தது. சிறிது நேரத்திற்குள் தீ கடகடவென பரவி, புகை மூட்டமாக மாறத் தொடங்கியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்களும், அப்பகுதி பொதுமக்களும் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து அண்ணா நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அதிநவீன தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கடையின் உள்ளே புகுந்து, தண்ணீரைப் பாய்ச்சி தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அருகிலும், பிற கடைகளுக்கு அருகிலும் இந்த உணவகம் அமைந்திருந்ததால் தீ மேலும் பரவும் அபாயம் இருந்தது. ஆனால், தீயணைப்பு வீரர்களின் சாதுரியமான மற்றும் விரைவான செயல்பாட்டால் தீ அருகிலுள்ள கட்டடங்களுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்களின் தீவிர போராட்டத்திற்குப் பிறகு, கடையில் ஏற்பட்ட தீ முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் பெரும் காயம் அல்லது உயிர்ச்சேதம் ஏற்படவில்லை எனவும்.

தீவிபத்து நடந்த பகுதியில் தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து (மின் கசிவா அல்லது சிலிண்டர் கசிவா என காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
அம்மா உணவகத்தின் சமையல் அறையில் கழிவுநீர் தேக்கம்

அம்மா உணவகத்தின் சமையல் அறையில் கழிவுநீர் தேக்கம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிப்காட் அமைக்க விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு

0
2 mins agoshare
ஆட்சியர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau