news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை
tv

Also Watch

tv

Read this

மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை

ஆனைமலை, கோவை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கோவை மாவட்டம்

கோவை அருகே தொப்பம்பட்டியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி கல்லூரியில் போலீஸ் பிரிவில் பணியாற்றும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக ஆனைமலை அருகே உள்ள ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் ஆழியார் அணை பகுதியில் நால்வர் தண்ணீரில் தத்தளிப்பது போல் சத்தம் போடுவதும் அவர்களை மீட்பதற்கு மத்திய ரிசர்வ் படை போலீஸ் கயிற்றை லாவகமாக தண்ணீரில் வீசி நால்வரையும் மீட்டு கரைக்கு கொண்டு வரும் விதம், தண்ணீரில் சிக்கிய நபர்களை வெளியே எடுத்து வரும் விதம் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்ட நபர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது.

மழைவெள்ள காலங்களில் கைகளில் கிடைக்கும் தண்ணீர் காலி பாட்டில்களை பயன்படுத்தி வெள்ளத்தில் மூழ்காமல் தண்ணீரில் நீந்தும் விதம், மழை வெள்ளம் தண்ணீர் அதிக ஆழமாக இருந்தால் அதை எவ்வாறு கண்டுபிடிப்பது.

தண்ணீரில் சிக்கி தத்தளிக்கும் நபரை மீட்டு அந்த நபரை வெளியில் கொண்டு வரும் விதம் ஆகிய பயிற்சிகள் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி கல்லூரியில் போலீஸ் பிரிவில்
பணியாற்றும் வீரர்களுக்கு 120 வீரர்களுக்கு ஆழியாறு அணை பகுதிக்குள் பரபரப்புடன் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி அளித்து அசத்தினார்கள்.

Related Link
டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக்கோரி போராட்டம்

டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக்கோரி போராட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிப்காட் அமைக்க விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு

0
47 mins agoshare
ஆட்சியர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau