Also Watch
Read this
By: Manigandan Raja

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது அதன் காரணமாக குற்றால அருவிகளில் தற்போது நீர்வரத்து அதிகரித்ததோடு வெள்ளப் பெருக்கானது ஏற்பட்டதுள்ளது.
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், உள்ளிட்ட அருவிகளில் தற்போது நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ளது இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.