Also Watch
Read this
By: Manigandan Raja

ராமநாதபுரம் மாவட்டம் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதியிலும் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதிகப்பட்சமாக 60 கி.மீ வேகம் வரையிலும் வீசக்கூடும் என்றும், கடல் அலை 10 மீட்டர் வரையிலும் எழும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு பகுதிக்கும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை உள்ளது. எனவே தங்களது மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்திடவும் மீன்வளத்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதையெடுத்து ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரை நிறுத்தம் செய்துள்ளனர். இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுகிறது கடல் அலையானது 10 அடிக்கு மேல் உயர்வதால் நாட்டுப் படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும் கடற்கரையோரத்தில் சுற்றுலா பயணிகள் செல்லவும், கடலில் குளிக்கவும், கடற்கரை ஓரங்களில் செல்பி எடுக்கவும் போலீசார் தடை வித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாலை நேரத்தில் தனுஷ்கோடி பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றம் அதிக அளவில் இருப்பதால் மீனவர்கள் பாதுகாப்புடன் இருக்க வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.