Also Watch
Read this
By: Manigandan Raja

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் அருகே நெய்தலூர் பகுதியில் டாஸ்மார்க் கடை ஒன்று அமைந்துள்ளது 500-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வசிக்கும் பகுதி அருகே இந்த கடை இருப்பதால் மது அருந்திவிட்டு வருபவர்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், ஏராளமானோர் குடும்ப தலைவனை இழந்த நிலையில் பிள்ளைகளை வளர்ப்பதற்கு பெரும் சிரமம் இருந்து வருவதாகவும்.
மேலும் அருகில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாயிலில் அமர்ந்து குடித்துவிட்டு நாள் ஒன்றுக்கு பத்துக்கும் மேற்பட்ட பாட்டில்கள் மற்றும் கப்புகளை போட்டுவிட்டு செல்வதாகவும்.
மேலும் சாலையோரம் அமைந்துள்ள இந்த கடையினால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுவது வழக்கமாக இருந்து வருவதாகவும் கூறி நெய்தலூர் கிராம பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டும், சாலையில் அமர்ந்தும் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்துமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் முருகவேலு தலைமையில் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதை ஒட்டி முற்றுகைப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு, கிராம பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.