Also Watch
Read this
By: Manigandan Raja

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பாதாள சாக்கடை பிரச்சனை நிலவி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே இன்று அரசு மருத்துவமனையில் இருந்து வரும் கழிவு நீர் அம்மா உணவகத்தின் சமையல் கூடத்தில் குளம் போல் தேங்கி வழிந்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சமையல் கூடம் முழுவதும் சாக்கடை நீர் சூழ்ந்ததால் ஊழியர்கள் முகசுழிப்புடன் பொதுமக்களுக்கு உணவு சமைத்து கொடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் உணவருந்த வரும் பொதுமக்கள் பலர் மூக்கை மூடிக் கொண்டு உணவு அருந்தும் நிலை சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதோடு , தொற்றுநோய் பரவும் அபாயமும் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொடர்ந்து மேற்கொண்டு சமைக்க முடியாத சூழல் இருப்பதாக அங்கு பணியாற்றத் கூடிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சாலைகளிலும் பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்தோடும் அவல நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.