Also Watch
Read this
Posted on: Jan 08, 2026 11:52 AM
By: Manigandan Raja
நெல்லை மாவட்டம், பணகுடியில் கஞ்சா போதையில் இருந்த நண்பனால் அரிவாளால் வெட்டப்பட்ட, 10ஆம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். பணகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் லெட்சுமணனை பார்ப்பதற்காக, அவனது நண்பனான 23 வயதான சபரிராஜன் கடந்த 5ஆம் தேதி மாலை வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், கஞ்சா போதையில் இருந்த சபரிராஜன், லெட்சுமணனை அரிவாளால் வெட்டியதோடு, பின்னர் தானே அழைத்து சென்று பணகுடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தான். சபரிராஜன் கைதான நிலையில், மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதையும் பாருங்கள் - காதலன் முகத்தில் தாலியை வீசியெறிந்த காதலி
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved