Also Watch
Read this
By: Web Team

ஈரோடு மாவட்டம் பர்கூர் அருகே மின்வேலியில் சிக்கிய ஆண் காட்டு யானை உயிரிழந்தது. ஈரட்டி பகுதியில் வைரன் என்பவர் 4 ஏக்கரில் விவசாயம் செய்து வரும் நிலையில், விளைநிலங்களுக்குள் யானைகள் புகுவதை தடுக்க மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. அந்த மின்வேலியில் சிக்கிய யானை மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே பலியானது. இதனை தொடர்ந்து உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved