Also Watch
Read this
By: Web Team

இராணிப்பேட்டை அருகே தோல் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றவர் , மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் சடலத்துடன் ஆலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆயிலம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், கத்தியவாடி அருகே இயங்கி வரும் அப்துல்லா தம்வீல் & கோ என்ற தோல் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்ற சில மணி நேரத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். ரசாயன தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தாரா என சந்தேகம் தெரிவித்த உறவினர்கள், உரிய விசாரணை நடத்தி உயிரிழப்புக்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும் என கோரி மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved