தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பேரூராட்சிக்குட்பட்ட சண்முகசுந்தரம் குடியிருப்பு பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள், தொடர் மழை காரணமாக சேறும் சகதியுமாக மாறியதால் பொது மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைக் காலங்களின் போது, இதே நிலை தொடர்வதாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள பொது மக்கள், முறையான சாலைவசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்துள்ளனர்.