news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பள்ளி பேருந்து மீது மோதிய டிப்பர் லாரி
tv

Also Watch

பள்ளி பேருந்து மீது மோதிய டிப்பர் லாரி

ராமநாதபுரம்

78

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
rmp 1(2)


ராமநாதபுரத்தில் தனியார் பள்ளி பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பரமக்குடி அடுத்த சத்திரக்குடியில் வாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று காலை இப்பள்ளிக்கு சொந்தமான பேருந்து சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றுக்கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது.


பள்ளி பேருந்து மீது மோதிய டிப்பர் லாரி
மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பள்ளிக்குள் செல்வதற்காக பள்ளி பேருந்து சாலையின் இடது புறமாக திரும்பி உள்ளது. அப்போது பேருந்தின் பின்புறமாக பாறாங்கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி, பேருந்து மீது மோதியதில் அந்த பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


மாணவ, மாணவிகள், ஓட்டுநர், ஆசிரியர்கள் காயம்
இதில் பள்ளி மாணவ, மாணவிகள், ஓட்டுநர், ஆசிரியர்கள் என 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விருதுநகரில் இருந்து பாறாங்கல் ஏற்றிக்கொண்டு தங்கச்சிமடம் சென்று லாரியில் அளவுக்கு அதிகமாக பாறாங்கல்களை ஏற்றியதால் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

லாரி உரிமையாளருக்கு ரூ.1.40 லட்சம் அபராதம்
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அஜாக்கிரதையாக லாரியை ஒட்டி சென்றதாக லாரி உரிமையாளருக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ராமநாதபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் தங்கராசு உத்தரவிட்டார். மேலும் லாரியின் உரிமத்தை ரத்து செய்ய விருதுநகர் மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related Link
பெண்ணுக்கு ஒரே உதை!

பெண்ணுக்கு ஒரே உதை!


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved