Also Watch
Read this
By: Web Team

திருப்பத்தூர் நகை பறிக்க முயற்சி :
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிக்க முயன்றவனை போலீசார் தேடி வருகின்றனர்.
அம்பூர் பேட்டையை சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் ஜாய்சி என்பவரது மகனும், மகளும் சித்த மருத்துவர்களாக உள்ள நிலையில், மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும் எனக் கூறி வீட்டிற்கு வந்த நபர், ஜாய்சி மட்டும் தனியாக இருப்பதை நோட்டமிட்டு சென்றான்.
சிறிது நேரம் கழித்து மாஸ்க் மற்றும் தொப்பி அணிந்து கொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்தவன், அத்துமீறி நுழைந்து ஜாய்சியின் கழுத்தை நெரித்து நகை பறிக்க முயன்றான். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததால் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றான்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved