news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மது போதையால் விபத்து, அரசு, தனியார் பேருந்துகள் மோதல், எலும்புக்கூடான பேருந்து
tv

Also Watch

tv

Read this

மது போதையால் விபத்து, அரசு, தனியார் பேருந்துகள் மோதல், எலும்புக்கூடான பேருந்து

ராஜபாளையம், விருதுநகர்

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
govt bus accident

ராஜபாளையத்தில், அரசுப் பேருந்தும் தனியார் கல்லூரி பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில், எலும்பு கூடாக காட்சி அளித்த பேருந்தைக் கண்டு, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் - தென்காசி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 8க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுனர் மது போதையில் விபத்தை ஏற்படுத்தியதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விபத்தில் சிக்கிய அரசு பேருந்து எலும்பு கூடு போல் காட்சி அளித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு பேருந்துகளும், ராஜபாளையம் வாசுகி நர்சரி கார்டன் பகுதியில் உள்ள குறுகிய வளைவில் வந்து கொண்டிருக்கும் போது, அதிவேகமாக வந்த கல்லூரி பேருந்து, பக்கவாட்டு பகுதியில் முழு வேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் அசோக் பாபு தலைமையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

12
7 hrs 2 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved