Also Watch
Read this
By: Web Team

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் டூவீலரில் ரீல்ஸ் எடுத்தபடி சென்ற 2 இளைஞர்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். திருவள்ளூரை சேர்ந்த சசி, தனுஷ் ஆகியோர் ஹெல்மெட் வாங்குவதற்காக டூவீலரில் ரீல்ஸ் எடுத்தபடி அதிவேகமாக சென்றனர். மலையம்பாக்கம் அருகே முன்னால் சென்ற முதியவர் முத்துவின் டூவீலர் மீது மோதியதில் 3 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர். இதைக்கண்டு உதவி செய்ய வந்த ஆட்டோ ஓட்டுநர் கார்த்தி மீது டூவீலரில் வந்த பிலிப் என்பவர் மோதியதில் 2 பேரும் காயமடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved