Also Watch
Read this
By: Web Team

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் வீட்டின் அருகாமையில் கழிவுநீர் தேங்கி நிற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட பெட்டி நாயுடு தெரு விரிவு பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லை என கூறப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல், வீட்டு காலி மனைகளில் தேங்கி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவானதாக அச்சமடைந்த மக்கள் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved