Also Watch
Read this
By: Web Team

மகளிர் தின வாழ்த்து :
திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவிலில் கடந்த 6ம் தேதி சனி பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இக்கோயிலுக்கு இன்று வந்த நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார். ஸ்ரீ சனி பகவான் சன்னிதியில் சிறப்பு பூஜைகள் பங்கேற்று வழிபட்டார்.
இவருக்கு கோவில் நிர்வாகம் மற்றும் தேவஸ்தானம் சிறப்பான வரவேற்பு கொடுத்து சாமி தரிசனத்தில் பங்கேற்க வைத்தனர். தொடர்ந்து கோவிலில் சுற்றி வந்து வழிபாடு மேற்கொண்ட சிவகார்த்திகேயனை கண்ட பக்தர்கள் அவரை சூழ்ந்து செல்ஃபி எடுக்க போட்டி போட்டு சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் சிவகார்த்திகேயனை சூழ்ந்த பக்தர்கள் அவர்கள் வெளியேற விடாமல் சூழ்ந்ததால் அவரை மீட்க முடியாமல் ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி திணறினார்கள். பின்னர் கோயில் யானை பிரக்ருதியிடம் சிவகார்த்திகேயன் ஆசி பெற்றார் .
மேலும் கோயில் விட்டு வெளியே வர விட முடியாமல் பக்தர்கள் சிவகார்த்திகேயன் சூழ்ந்து வந்த வண்ணமே முண்டியடித்துக் கொண்டனர் தொடர்ந்து சிவகார்த்திகேயனை மீட்டு கோயில் ஊழியர்கள் வழி அனுப்பி வைத்தனர்.
தரிசனத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிவகார்த்திகேயன், எல்லோருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். பெண்களுடைய முக்கியம் முன்னேற்றம் குறித்தும் பெண்கள் குறித்து எடுக்கப்பட்ட படம் தாய்க்கிழவி அதற்கு மக்கள் கொடுத்த வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது.
தாய் கிழவி எதிர்பார்த்தது விட பெரிய வெற்றி கிடைத்துள்ளது எல்ல அப்பத்தாக்கும் அம்மாச்சிக்கும் ஆத்தாக்களுக்கும் பாட்டி கான படம் தாய்க்கிழவி. அடுத்த படம் "செய்யுயோன்" கமல் தயாரிப்பில் அடுத்த மாதம் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved