Also Watch
Read this
By: Web Team

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2020ஆம் ஆண்டு பிஏ ஆங்கில பட்டப்படிப்பை முடித்த தங்களுக்கு சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாக கூறி மாணவ, மாணவிகள் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பேச்சுவார்த்தை நடத்திய கல்லூரி பேராசிரியர்கள், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ்களை வாங்கி வந்து நாளைக்கே வழங்கப்படும் என கூறிய நிலையில், ஐந்து ஆண்டுகளாக இதையே கூறுவதாகவும், சான்றிதழ் இல்லாததால் வேலைக்கு செல்ல முடியவில்லை என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.