Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஆம்புலன்ஸ் வேகத்தடையில் ஏறி இறங்கும்போது அதன் பின்பக்க கதவு திறக்கப்பட்டு, பெண் நோயாளி கீழே விழும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டு பட்டறை சாலையில் வழுக்கி விழுந்ததில் காயம் அடைந்த பர்கத் நிஷா, தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்குள்ள ரயில்வே கிராஸிங்கில் உள்ள வேகத்தடையில் ஆம்புலன்ஸ் ஏறி இறங்கிய போது, எதிர்பாராத விதமாக அதன் பின்புற கதவு திறந்தது.
அப்போது, ஆம்புலன்சில் இருந்த பெண் நோயாளி வெளியே வந்து கீழே விழுந்தார்.