Also Watch
Read this
By: Web Team

சென்னை பெரம்பூரில் போக்குவரத்து காவலர் கீழே தள்ளி விட்டதால், தனியார் வங்கி மேலாளர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தில், செம்பியம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தனியார் வங்கி மேலாளராக இருந்த கரம்சந்த் காமராஜ், ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தபோது பெரம்பூர் அருகே போக்குவரத்து காவலர் சுதாகர் ப்ரீத் அனலைசர் மூலம் அவரை சோதனை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
மதுப்பழக்கம் இல்லாத தன்னை எதற்கு சோதனை செய்ய வேண்டும் என கரம்சந்த் காமராஜ் வாக்குவாதம் செய்ததால், உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் சுதாகர் இருவரும் சேர்ந்து அவரை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.