news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "அண்ணன் எடப்பாடியாரே எச்சரிக்கையாக இருங்கள்"
tv

Also Watch

tv

Read this

"அண்ணன் எடப்பாடியாரே எச்சரிக்கையாக இருங்கள்"

எழும்பூர், சென்னை

27

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பீகார் மாநிலத்தில், நிதிஷ் குமாருக்கு பாஜக செய்தது நம்பிக்கை துரோகம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார். நிதிஷ் குமாரின் கதி, தமிழகத்தில் இபிஎஸ்-க்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

பாஜக உடன் சேர்ந்த நாள் முதல்... 
இதுதொடர்பாக, விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது;
பீகாரில், நிதிஷ் குமாருக்கு பொது மக்களிடையே நல்ல மதிப்பு உண்டு. அவரது கட்சிக்கு நல்ல பாரம்பரியம் உள்ளது. ஆனால், அவர் பாஜக உடன் என்றைக்கு சேர்ந்தாரோ, அன்று முதல் அவர் மீதான நன்மதிப்பு சரிந்து கொண்டே வந்தது. இப்போது, முதலமைச்சர் பதவியில் இருந்து அவரை ராஜினாமா செய்ய வைக்கக் கூடிய அளவிற்கு நிலைமை போயிருக்கிறது என்பது மிகவும் கவலை அளிக்கிறது.

அ.தி.மு.க. புரிந்து கொள்ளும்
நிதிஷ் குமார் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி, மாநிலங்களவைக்கு செல்லக் கூடிய நிலையை பாஜக ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலை அதிமுகவிற்கு வந்துவிடக் கூடாது என்று தான் தொடக்கத்தில் இருந்தே நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன். ஆனால், அந்த நேரத்தில் அதிமுகவினர் என்னை கடுமையாக விமர்சித்தனர். பாஜகவை விரைவில் அ.தி.மு.க. புரிந்து கொள்ளும். என்னுடைய கருத்துகளையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

அண்ணன் எடப்பாடியாரே எச்சரிக்கை
அண்ணன் எடப்பாடியாரே எச்சரிக்கையாக இருங்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக் காத்த திராவிட இயக்கமான அதிமுகவை கரைய விட்டு விடாதீர்கள், காப்பாற்றுங்கள். தனித்து நின்றாலே அதிமுகவின் வாக்கு வங்கி மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும். ஜெயலலிதா அம்மையார் இல்லாமலேயே 65க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. இதை முன்பே நான் கூறினேன். தற்போது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்தால், அவரால் அந்த பதவியில் அமர முடியுமா? நிதீஷ் குமாரின் கதி எடப்பாடி பழனிசாமிக்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
இவ்வாறு திருமாவளவன் பேசி உள்ளார்.

Related Link

"மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தினவிழா"

           

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல குவிந்த பக்தர்கள்

3
50 mins agoshare
திருவண்ணாமலை கிரிவலம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved