திண்டுக்கல் சிட்டி மருத்துவமனை தீ விபத்து தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மருத்துவமனை மேலாளர் வேல்பாண்டி மற்றும் ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.