Also Watch
Read this
Posted on: Dec 22, 2024 01:51 AM
By: Srini Vasan

மதுரை, வாடிப்பட்டி அருகே விதிமீறி செயல்படும் கல்குவாரிகள் குறித்து புகார் அளித்த இளைஞரை தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கச்சைக்கட்டி பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவர், அப்பகுதியில் விதிமீறி இயங்கி வரும் கல்குவாரிகளால் மக்களுக்கு ஏற்படும் சுகாதார பாதிப்புகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக பதில் பெற்று வீடியோ பதிவிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்து குவாரியில் பணியாற்றும் முருகன் என்பவர், இரும்புக் கம்பியால் ஞானசேகரனை கடுமையாக தாக்கியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved