Also Watch
Read this
By: Web Team

அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டை நெல் விற்பனைக்கு 40 ரூபாய் கொடுக்கும் நிலை தொடர்வதாக திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் கொண்டுவரும் நெல் ஈரப்பதம் மற்றும் தூசி, மண்ணுடன் தூய்மையற்றதாக இருக்கும் நிலையில், அதனை சுத்தப்படுத்தும் தனியார் கூலித் தொழிலாளிகளுக்காக பணம் வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
கூலித் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் 10 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதால், அதனை உயர்த்தி வழங்கினால் தங்களிடம் இருந்து பணம் வசூலிக்கும் அவசியம் இருக்காது என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.