news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆபத்தான படிக்கட்டு பயணம், வைரலான காட்சிகள்
tv

Also Watch

tv

Read this

ஆபத்தான படிக்கட்டு பயணம், வைரலான காட்சிகள்

கோவை

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
cbe bus

கோவையில் படிக்கட்டில் தொங்கியவாறு, தனியார் பேருந்தில் பயணம் செய்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரல் ஆகியுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு தினந்தோறும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தனியார் பேருந்துகள், தங்களது சுய லாபத்திற்காக பொது மக்களின் உயிரைப் பொருட்படுத்தாமல், படிக்கட்டில் பயணம் செய்ய வைத்து வருகின்றனர். அதி வேகத்தில் பேருந்துகளை இயக்குவதால் படிக்கட்டில் தொங்கியவாறு செல்லும் பயணிகள் சில நேரம் கீழே விழுந்து படுகாயம் அடைவதும், உயிர் பலி ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.
இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் தனியார் பேருந்தில் பயணிகளை படிக்கட்டில் தொங்கவிட்டு சென்ற வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுவும் பெண் பயணி ஒருவர் தொங்கி கொண்டு வருகிறார். இந்த பேருந்து மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல் துறையினருக்கும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சாய்ந்து சேதம்

0
3 mins agoshare
தேனி வாழைத்தோப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved