Also Watch
Read this
By: Web Team

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று முதல் முறையாக பிரம்ம முகூர்த்தத்தில் கொடியேற்றப்பட்டது.
முன்னதாக கொடி மரத்திற்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மாலை அணிவித்து விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் திருகாப்பு கட்டி கொண்டனர். சிகர நிகழ்ச்சியான மஹிஷா சூரசம்ஹாரம் அக்டோபர் 2 ஆம் தேதி கோவில் கடற்கரையில் நடைபெற உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved