Also Watch
Read this
By: Fyrose Banu

தஞ்சாவூரில் உணவு பண்டங்களின் விலையை 30 சதவீதம் உயர்த்த முடிவு, வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
அவசர ஆலோசனைக் கூட்டம்
தஞ்சை மாவட்ட வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட வணிகர் சங்க கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் ராஜா சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
உணவு பண்டங்களின் விலை 30% உயர்த்த முடிவு
அதில் ஹோட்டலுக்கு சமையல் கியாஸ் தட்டுப்பாடு இன்றி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், கள்ள சந்தையில் கேஸ் சிலிண்டர்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடால் அனைத்து உணவுப் பொருட்களும் 30 சதவீதம் உயர்த்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதே நிலை நீடித்தால் இன்னும் இரண்டு நாட்களில் அனைத்து கடைகளையும் மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் கூறியுள்ளனர். இக்கூட்டத்தில் வணிகர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved