Also Watch
Read this
By: Web Team

விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் சுற்று வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில், பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் போரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோட்டக்குப்பம் நகராட்சி எதிரே, பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இன அழிப்பு யுத்த பயங்கரவாதத்தை கண்டித்து, கோட்டகுப்பம் வட்டார ஜமாஅத்துல் உலாசபை இஸ்லாமியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடுத்து வரும் இன அழிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும், பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பள்ளிவாசல் தலைவர்கள், அனைத்து கட்சி மற்றும் இயக்க நிர்வாகிகள், வியாபாரிகள், வணிகர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆட்டோ மற்றும் மினி லோடு சங்க நிர்வாகிகள் மற்றும் கோட்டக்குப்பம் சுற்றியுள்ள ஜமாத் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு இஸ்ரேலுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.