Also Watch
Read this
By: Web Team

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பொத்தையடி தனியார் எரியூட்டும் நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா போதை பொருட்களை போலீசார் தீயிட்டு அழித்தனர். மதுரை மாவட்டத்தில் 112 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 963 கிலோ கஞ்சா, விருதுநகர் மாவட்டத்தில் 48 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 85 கிலோ கஞ்சா என ஆயிரத்து 48 கிலோ கஞ்சா மூட்டைகள் மதுரை சரக டிஐஜி மற்றும் மதுரை மாவட்ட எஸ்பி முன்னிலையில் எரிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved