news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குலசேகர பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்
tv

Also Watch

tv

Read this

குலசேகர பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்

தூத்துக்குடி

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kulasekara Perumal Temple

ஒட்டப்பிடாரம் அருகே ராஜாவின் கோவில் ஸ்ரீ குலசேகர பெருமாள் கோயிலில், புரட்டாசி 3ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஒட்டப்பிடாரம் அருகே ராஜாவின்கோவில் கிராமத்தில், சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ குலசேகர பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு, புரட்டாசி 3ஆவது சனிக்கிழமை ஆன இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது. ஸ்ரீ குலசேகர பெருமாள் உடன் வீற்றிருக்கும் ஸ்ரீதேவி, பூதேவி பரிகார தெய்வங்களுக்கு மஞ்சள், பால், தேன், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் போன்ற 18 வகையான அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. பெருமாள், ராமர் அவதாரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போராட்டம் வாபஸ் என சி.ஜே.பி. அறிவிப்பு

9
15 hrs 18 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau