Also Watch
Read this
By: Web Team

ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய அமைப்பாளர் கவுதமன் என்பவரது வீட்டின் மீது காவல் உதவி ஆய்வாளர் மகன் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கெளதமனுக்கும், அதே பகுதியை சேர்ந்த உதவி ஆய்வாளர் கோவிந்தன் என்பவரது மகன் பிரபுவுக்கும் கடந்த செவ்வாய்கிழமை நடந்த முளைப்பாரி திருவிழாவில் தகராறு ஏற்பட்டது.
இந்த முன்விரோதத்தில் நள்ளிரவில் பிரபுவும் அவரது கூட்டாளிகளும் கெளதமன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved