Also Watch
Read this
By: Web Team

இன்னும் வராத ஒன்றை, "புலி வருது, புலி வருது" என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத்தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்து வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியின் அவலங்களை மறைக்க,
தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை வைத்து முதலமைச்சர் மடைமாற்றம் செய்வதாகவும்,
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இந்தி திணிப்பு விவகாரங்களில் தமிழ்நாட்டு மக்கள் தெளிவான மனநிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.