news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திமுக MLAவின் எகிறும் க்ரைம் ரேட்
tv

Also Watch

tv

Read this

திமுக MLAவின் எகிறும் க்ரைம் ரேட்

வாக்காளப் பெருமக்களே...

25

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நெல்லை, பாளையங்கோட்டை தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏவான அப்துல் வகாபிற்கு மீண்டும் சீட்டு வழங்கப்படுமா? என்று பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், அவர் மீதான அடுக்கடுக்கான புகார்களால் அவருக்கு வாய்ப்பு கிடைப்பதென்பது எட்டாக்கனி தான் என உரைக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

மாய்ந்து மாய்ந்து தேர்தல் வேலை
நெல்லை எங்கள் எல்லை என திமுக, காலம் காலமாக பெருமை பேசிவந்த தொகுதியை தொல்லையாக மாற்றி வைத்திருக்கிறார் பாளையங்கோட்டை எம்.எல்.ஏ அப்துல் வகாப். மல்லாந்து படுத்துக் கொண்டே வெற்றிக் கனியை ருசிக்க வேண்டிய திமுக, இப்போது மாய்ந்து மாய்ந்து தேர்தல் வேலையை பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது.

30 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கிய தொகுதி பாளையங்கோட்டை. சிறுபான்மையின மக்கள் நிறைந்து காணப்படும் இந்த தொகுதியில், அரசு ஊழியர்களின் வாக்குகளும் கணிசமான அளவில் உள்ளன. இந்த சாதகமான அமைப்புகள் தான் இத்தொகுதியில் திமுக 30 ஆண்டுகளாக யாராலும் அசைக்க முடியாத சக்தியாக கோலோச்சி நிற்க காரணியாக உள்ளது. முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் 4 முறை தொடர்ந்து எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று பணியாற்றி வந்த சூழலில், கடந்த தேர்தலில் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளரான அப்துல் வகாப் நிறுத்தப்பட்டு எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நெல்லை மேயர் தேர்வு வரை
மாவட்ட செயலாளராக இருக்கும் போதே குறுநில மன்னரை போல தனி ராஜ்ஜியம் நடத்தி வந்த அப்துல் வகாப், சட்டமன்ற உறுப்பினரானதும் ஏகப்பட்ட புகாரில் சிக்கினார். தொகுதியில் எந்த பணி நடந்தாலும் வகாப்புக்கு தனி கவனிப்பு இல்லையென்றால் அந்த திட்டமே கிடப்பில் செல்லவேண்டிய நிலை தான் இன்றும் நீடிப்பதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் சரியாக காய் நகர்த்தி தனது ஆதரவாளர்களை கவுன்சிலராக்கி அதிகாரத்தை விரிவுபடுத்திய வகாப், நெல்லை மேயர் தேர்வு வரை தமது செல்வாக்கை பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்தினார். பல கட்சிகளில் பயணித்த வரலாறு கொண்ட வகாபை, குறுகிய காலத்தில் உச்சாணிக் கொம்பில் அமரவைத்தது.



நெல்லை மாவட்ட அரசியலில் கரும்புள்ளி
நெல்லை மாநகர மேயராக சரவணன் பொறுப்பேற்றதில் பெரும் பங்கு வகித்த அப்துல் வகாப், பிற்காலத்தில் கொடுக்கல் வாங்கலில் அவருடன் ஏற்பட்ட மோதலால் அவரை பதவியிலிருந்து தூக்க உள்ளடி வேலைகள் பார்த்ததாக சொல்லப்படுகிறது. வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர் விடுவது, ஒப்பந்த பணிகளில் கமிஷன் கேட்பது, மேயரின் அதிகாரத்தில் மூக்கை நுழைப்பது என ராஜ்ஜியம் நடத்தி வந்த வகாப், ஒருகட்டத்தில் மேயரிடமே தனக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு கொடுக்க வேண்டும் என டார்கெட் ஃபிக்ஸ் செய்து மிரட்டியதாகவும் சொல்லப்படுவது பகீர் கிளப்புகிறது. இந்த அழுத்தத்தை எல்லாம் தாங்க முடியாமல், சரவணன் தற்கொலைக்கு முயன்றது எல்லாம் நெல்லை மாவட்ட அரசியலில் ஒரு கரும்புள்ளியாகவே பதிந்துள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு
ஒற்றை எம்.எல்.ஏவின் அட்ராசிட்டியால் ஒட்டுமொத்த தலைமைக்கே அவமானம் ஏற்படுவதை உணர்ந்த திமுக, தற்காலிக தீர்வாக மேயர் பதவியிலிருந்த சரவணனை மாற்றி கிட்டு என்கிற ராமகிருஷ்ணனுக்கு அந்த பதவியை கொடுத்தது. வகாப்பின் தீவிர ஆதரவாளராக இருக்கும் கிட்டு, மாவட்ட செயலாளருக்கு வளைந்து கொடுப்பது முதல் வாரி கொடுப்பது வரை அவ்வளவு விசுவாசமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அதிகளவில் முறைகேடு செய்துள்ளதாகவும் வகாப் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. பொறுத்து பொறுத்து பார்த்த திமுக தலைமையும் அப்துல் வகாபை கட்சிப்பதவியிலிருந்து நீக்கி அதிரடி காட்டியது. மத்திய மாவட்ட செயலாளர் பதவி மைதீன் கானுக்கு மீண்டும் வழங்கப்பட்டது. 6 மாத கால அடக்கத்துக்கு பின்பே மீண்டும் அவருக்கு கட்சி பதவி கிடைத்தது.

பாளையை வளைத்துப் போடுமா மதிமுக?
கிரைம் ரேட்டில் டாப் ரேங்கில் இருக்கும் அப்துல் வகாபிற்கு இம்முறை சீட்டு கிடைப்பதே அரிது என்பதை அறிந்து வைத்திருக்க கூடிய கூட்டணி கட்சியான மதிமுக, இம்முறை பாளையை வளைத்து போட திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதன்படி மதிமுகவின் நெல்லை மாநகர செயலாளர் நிஜாம், இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஒருவேளை திமுகவே இந்த தொகுதியில் போட்டியிடும் பட்சத்தில், மைதீன் கானுக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும் என அறிவாலய சீனியர்கள் கூறுகின்றனர். எதிர்தரப்பில் அதிமுகவை சேர்ந்த ஜெரால்டு இந்த முறையும் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அனல்பறக்கும் இந்த யூகங்களுக்கெல்லாம் இன்னும் ஓரிரு மாதங்களில் விடை கிடைத்துவிடும் என்பதே நிதர்சனமான உண்மை.

Related Link
KASக்கு எதிர் வேட்பாளர் - தயங்கும் EPS?

KASக்கு எதிர் வேட்பாளர் - தயங்கும் EPS?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
7 hrs 7 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved