news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews களத்தில் இணையாத திமுக - தேமுதிக.
tv

Also Watch

tv

Read this

களத்தில் இணையாத திமுக - தேமுதிக.

ஈரோடு கிழக்கு வாக்காளப்பெருமக்களே... தேர்தல் 2026

55

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட சிட்டிங் எம்.எல்.ஏ. சந்திரகுமாருக்கு மீண்டும் வாய்ப்பு என பேசப்படும் நிலையில், சந்திரகுமாருக்கு சீட்டு வழங்கக் கூடாது என கூட்டணி கட்சியான தேமுதிகவில் இருந்து போர்க்கொடி தூக்கி இருப்பது, புது வித பிரச்சனையாக மாறியிருக்கிறது. தேமுதிகவில் இருந்து திமுகவுக்கு வந்து எம்.எல்.ஏ. ஆன சந்திரகுமார், கேப்டன் விஜயகாந்த் குறித்தே கண்டபடி பேசிய வரலாறு இருப்பதால், சந்திரகுமாருக்கு ஆதரவாக ஓட்டு கேட்பது தேமுதிகவினருக்கு தர்ம சங்கடத்தை கொடுத்திருக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் சந்திரகுமார்
வழக்கமாக, கூட்டணி கட்சிக்கு தொகுதியை ஒதுக்க கூடாது என திமுகவினர் போர்க்கொடி தூக்கி தான் பார்த்திருப்போம். ஆனால், ஈரோடு கிழக்கில் புது விதமாக திமுகவில் சிட்டிங் எம்.எல்.ஏ.வுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என கூட்டணி கட்சியான தேமுதிக முணுமுணுத்து வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து, கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக சார்பில் சந்திரகுமார் களமிறக்கப்பட்டு எம்.எல்.ஏ. ஆனார். இந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலிலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் சந்திரகுமார் தான் போட்டியிடக் கூடும் என பேசிக் கொள்ளப்படும் நிலையில், அவருக்கு எதிராக தற்போதே குரல் எழ தொடங்கியுள்ளது.

தேமுதிகவினரின் மனதில் ஆறாத வடு
தேமுதிகவில் கேப்டன் விஜயகாந்துக்கு நெருக்கமான நபராக இருந்த சந்திரகுமார், திடீரென திமுகவில் ஐக்கியமாகி, ஒரு கட்டத்தில் விஜயகாந்த் குறித்தே கண்டபடி பேசியதாக சொல்லப்படுகிறது. தேமுதிகவில் இருந்த போது தலைமையுடன் ரத்தமும், சதையுமாக இருந்த சந்திரகுமார், கட்சியை விட்டு வெளியேறிய பின்னர் விஜயகாந்த் குறித்தே அவதூறு பரப்பும் வகையில் பேசியது தேமுதிகவினரின் மனதில் ஆறாத வடுவாக மாறி விட்டது.

மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது
இந்த சூழலில் தான், தேமுதிக வரலாற்றிலேயே முதன்முறையாக திமுக தலைமையிலான அணியில் இணைந்திருக்கும் நிலையில், இரு கட்சி தொண்டர்களும் களத்தில் எப்படி இணைந்து வேலை செய்வார்கள் என கேள்வி எழுந்தது. ஏனென்றால், விஜயகாந்த் மீது திமுக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து பிரச்சாரம் செய்திருக்கிறது. திமுகவின் விமர்சனங்களை கூட எதிர்க்கட்சி என்ற வகையில் ஏற்றுக் கொண்டு தேமுதிகவினர் கடந்து சென்றாலும், சந்திரகுமார் மாதிரி தேமுதிகவில் இருந்து திமுகவுக்கு வந்து விட்டு விஜயகாந்தை விமர்சித்தவர்களை மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்பதையே தேமுதிக நிர்வாகியின் இந்த ஆடியோ பதிவு உணர்த்துகிறது.

திமுக தலைமை ஏற்றுக் கொள்ளுமா? அல்லது புறந்தள்ளுமா?
இந்த நிலையில் தான், சந்திரகுமாருக்கு மீண்டும் சீட்டு கொடுக்கக் கூடாது என கூறி வரும் தேமுதிகவினர், சந்திரகுமார் தவிர்த்து வேறு யார் திமுகவில் போட்டியிட்டாலும் 100 சதவீதம் உழைக்க தயாராக இருப்பதாக சொல்கிறார்கள்.

முதன்முறையாக தேமுதிக - திமுக கூட்டணி ஐக்கியமானாலும், சில இடங்களில் இன்னும் விரிசல் இருப்பதையே சந்திரகுமார் விவகாரம் காட்டுகிறது. இதுகுறித்து சந்திரகுமாரிடம் விசாரித்த போது, கருத்து வேறுபாடு காரணமாக தேமுதிகவில் இருந்து வெளியே வந்ததாகவும், தனக்கு சீட்டு கொடுத்தால் நிச்சயம் எல்லா கூட்டணி கட்சியினரும் வேலை செய்வார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

புதிதாக கூட்டணியில் ஐக்கியமான தேமுதிகவினருக்கு இருக்கும் மன வருத்தத்தை திமுக தலைமை ஏற்றுக் கொள்ளுமா? அல்லது புறந்தள்ளுமா? என்பதே அடுத்தகட்ட எதிர்பார்ப்பு.

Related Link
தேசியக்கட்சிகளின் ஒரே நம்பிக்கை

தேசியக்கட்சிகளின் ஒரே நம்பிக்கை

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நூறுசாமி' திரைப்படம்

6
13 hrs 9 mins agoshare
நூறுசாமி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau