Also Watch
Read this
By: Web Team

சிப்காட் வேண்டாம் எனக் கூறி, கும்மி அடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே வஞ்சிநகரம், கொடுக்கம்பட்டி, பூதமங்கலம் உள்ளிட்ட மூன்று ஊராட்சி பகுதிகளை உள்ளடக்கி சுமார் 278 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், சிப்காட் வேண்டாம் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று, பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கல்லங்காடு சிவன் கோயில் முன்பு கிராமிய பாடல் பாடியபடி, கும்மியடித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
சிப்காட் அமைந்தால், விவசாயம், மேய்ச்சல் நிலம், பழங்கால கோயில்கள் பாதிப்படையும் எனக்கூறி தொடர்ந்து எதிர்ப்பு
தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் மேலூர், கொட்டாம்பட்டி, மற்றும் கீழவளவு காவல்துறையினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர்
குவிக்கப்பட்டு இருந்தனர்.