Also Watch
Read this
By: Web Team

கேரளாவில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக - கேரள எல்லையோர பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள், நாடுகாணி தாளூர், பாட்டவயல் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே நீலகிரி எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும் கேரளாவில் இருந்து கோழி, வாத்து, காடை உள்ளிட்டவற்றை கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved