Also Watch
Read this
By: Web Team

மறைந்த விஜயகாந்தின் 2 ஆம் ஆண்டு குருபூஜை விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 28ஆம் தேதி குருபூஜை விழா நடைபெற உள்ள நிலையில், தேமுதிக பொருளாளர் சுதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இபிஎஸ் வீட்டிற்குச் சென்று அழைப்பிதழ் கொடுத்தனர். தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டுக்கு சென்ற சுதீஷ், விஜயகாந்த்தின் குருபூஜை விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved