news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆ.ராசா ஆடியோ விவகாரம் குறித்து இபிஎஸ் ஆவேசம்
tv

Also Watch

ஆ.ராசா ஆடியோ விவகாரம் குறித்து இபிஎஸ் ஆவேசம்

சட்ட ரீதியாக விசாரணை

33

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஆ.ராசா பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியான நிலையில், வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய இபிஎஸ், நடவடிக்கை எடுத்தால் அடுத்த ஆடியோவை வெளியிடுவார் என்று, பகீர் குற்றச்சாட்டை கிளப்பி உள்ளார். வழக்கு போடுங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்ட இபிஎஸ், கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டாரா? என்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

சேலத்தில் இபிஎஸ் பிரச்சாரம்
சேலம் மாவட்டம், ஏற்​காடு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாழப்​பாடி​யில் வாக்கு சேகரித்து, அதி​முக பொதுச்​செய​லா​ளர் எடப்பாடி பழனி​சாமி பேசி​ய​தாவது:
அதி​முக ஆட்​சி​யின்​போது, 2017ல் கடுமை​யான வறட்​சி, அதனைத் தொடர்ந்து டெல்டா மாவட்​டங்​களில் புயல் பாதிப்​பு, பிறகு கொரோனா தொற்று பாதிப்​பு. அப்போது, அரசுக்கு ஒரு ரூபாய் கூட வரு​மானம் இல்​லை. வேலை​ வாய்ப்பு இல்​லாமல் மக்​கள் வீடு​களில் முடங்​கி இருந்​தனர். அந்த நிலை​யில், ரேஷனில் விலை​யில்லா அரிசி, பருப்​பு, சமையல் எண்​ணெய் வழங்​கினோம். ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் தலா ரூ.1,000 வழங்​கினோம். அரசு ஊழியர்​களின் சம்​பளத்​தில் ஒரு ரூபாய் கூட பிடித்​தம் இன்றி வழங்​கினோம். அப்​போது, பொங்​கல் பண்​டிகைக்கு ரேஷன் கார்​டுக்கு ரூ.2,500 வழங்​கினோம்.

திமுக ஆட்சியில்...
ஆனால், திமுக ஆட்​சி​யில் வறட்சி வந்​த​தா? புயல் வந்​த​தா? கொரோனா வந்​த​தா? எந்த பாதிப்​பும் இல்​லை, மக்​களுக்​கும் எது​வும் செய்யவில்​லை. ஆனால், ரூ.5 லட்​சம் கோடி கடன் வாங்கி வைத்​து உள்ளனர். திமுக அரசின் சாதனை, நம்மை எல்​லாம் கடனாளி​யாக மாற்​றியது தான்.

வீட்டு சிறையில்...
முன்​னாள் முதலமைச்சர் கருணாநிதி வீட்டு சிறை​யில் வைக்​கப்​பட்டு இருந்ததாக, திமுக முன்​னாள் அமைச்​சர் ஆ.ராசா தான், ஆடியோ வெளி​யிட்டார். அந்த செய்தி உண்​மை​யாக இருக்​கலாம். அவர்​மீது நடவடிக்கை எடுக்​க​வில்​லை. அவர் மீது கோபப்​பட்​டால், அடுத்த ஆடியோ வெளியிட்டு விடு​வார் என்று பயம். என்​மீது வழக்கு போடு​வார்​களாம். வழக்கு போடட்​டும். பல வழக்குகளை பார்த்​தவன் நான். ஸ்டா​லின், உதயநி​தி, கனி​மொழி என்று ஆளாளுக்கு யார் வேண்​டு​மா​னாலும் பேசட்​டும். திமுக​வுக்கு இது இறு​தித் தேர்​தல் என்று மக்​கள் முடிவு செய்து விட்​டார்​கள்.


சட்ட ரீதியாக விசாரணை
முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா மரணத்​தில் மர்​மம் உள்​ளது. அந்த உண்​மையை கொண்டு வரு​வோம் என்று எதிர்க்​கட்​சி​யாக இருந்​த​போது திமுக கூறியது. கண்​டு​பிடித்​து​விட்​டார்​களா? முன்​னாள் முதல்​வர் கருணாநிதி வீட்டு சிறை​யில் வைக்​கப்​பட்​ட​தாக கூறப்படும் விவ​காரத்​தில், அதி​முக ஆட்​சிக்கு வந்​ததும், சட்ட ரீதி​யாக விசா​ரணை நடத்​தி, அதற்கு காரண​மான​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும்.
இவ்​வாறு பேசி, எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

Related Link
கண்டென்ட் இல்லாமல் கண்டபடி பேச்சு - முதல்வர் விமர்சனம்

கண்டென்ட் இல்லாமல் கண்டபடி பேச்சு - முதல்வர் விமர்சனம்

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜெம் வீரமணி வழக்கில், செட்டில்மெண்ட் மன்னன் கணேசன்

21
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved