Also Watch
Read this
By: Manigandan Raja

ஒருவேளை தாம் அரசியலுக்கு வந்தாலும் சாதிக்கு எதிராக தான் செயல்படுவேன் என்றும், சுயசாதி பற்றுடன் ஒரு போதும் செயல்பட மாட்டேன் எனவும் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பொதுமக்கள் சார்பில், இயக்குநர் மாரி செல்வராஜுக்கு "ஐம்பெரும் படைப்புகளின் வெற்றி நாயகன்" என்ற தலைப்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய மாரி செல்வராஜ், தன்னை சாதி ரீதியாக யாரும் பின் தொடர வேண்டாம் என்றும், தனது கருத்தியலை புரிந்து கொண்டு பின் தொடருமாறும் ரசிகர்களை வலியுறுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved