news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுரண்டப்படும் கனிம வளங்கள்
tv

Also Watch

tv

Read this

சுரண்டப்படும் கனிம வளங்கள்

தேனி

27

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
theni 2


தேவாரம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் என்ற பெயரில் தொடர்ந்து கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இது குறித்து கனிமவள அதிகாரிகளை தொடர்பு கொண்டால் தொலைப்பேசியை எடுக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர்.


கைவரிசை காட்டும் மணல் மாஃபியாக்கள்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா விவசாயம் நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. இன்று வரை இந்த பகுதியில் விவசாயம் என்ற பெயரில் சில மணல் மாஃபியாக்கள் மணல் மற்றும் கனிம வளத்தை சட்ட விரோதமாக காளவாசலுக்கும், தனியார் ஃபிளாட்டுகளுக்கும் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அளவுக்கு அதிகமாக சுரண்டப்படும் கனிம வளங்கள்

குறிப்பாக உத்தமபாளையம் தாலுகா தேவாரம் அருகே உள்ள கொட்டிபுரம், எரணம்பட்டி சுற்றுவட்டார மழை மறைவு பகுதிகளில் கனிம வளங்களை ஜேசிபி இயந்திரம் கொண்டும், டிப்பர் லாரிகளிலும் அளவுகளை மீறி அள்ளப்பட்டு வருகிறது.


நியூஸ் தமிழில் மட்டுமே செய்திகள்...


தொடர்ந்து இதுகுறித்து நியூஸ் தமிழில் மட்டுமே செய்திகள் வெளியிட்டு வந்தாலும் கூட, ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் அதனை தொடர்ந்து செய்து வருகின்றனர். அதேபோல் இன்று தேவாரம், பொட்டிபுரம் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் அரசு நிர்ணயித்த அளவைவிட டிப்பர் லாரிகளிலும் சட்ட விரோதமாக மணல் அள்ளி விற்று வருகின்றனர்.


விவசாயம் செய்ய முடியாத சூழல்

இதுகுறித்து கனிமவள அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்க முற்பட்டாலும் கூட அவர்கள் போனை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், வரும் காலங்களில் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்படும் எனவும் வேதனை தெரிவித்துள்ள்னர்.

மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

உடனடியாக தேனி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து மணல் எடுக்க யார்? யார்? தங்களிடம் அனுமதி பெற்று உள்ளார்கள் யார் பெறவில்லை என்று கண்டறிந்த் அவர்கள் மீது சட்ட ரீதியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Related Link
ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்

ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
12 hrs 3 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved