news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்
tv

Also Watch

tv

Read this

ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்

ராணிப்பேட்டை

41

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
haj 2

புனித ஹாஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியில் மருத்துவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்


புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான தடுப்பூசி முகாம் நிகழ்ச்சி ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷா நந்தினி தலைமையில் நடைபெற்றது. இதற்கு மருத்துவ பணிகளில் இணை இயக்குனர் தீர்த்தலிங்கம், மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் இணைந்து தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தனர்.


தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் முகாம்


ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து இந்த ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு சவுதி அரசு விதித்த கட்டுப்பாடுகளின்படி, மருத்துவ பரிசோதனைகள் நடத்தி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்த முகாம் தொடர்ந்து தொடர்ந்து 4 நாட்கள் தினமும் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறுகிறது.

சுமார் 194 நபர்களுக்கு பரிசோதனை

ஆகையால் சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கல்லீரல், சிறுநீரக செயல் திறன், மாா்பக எக்ஸ்ரே, இ.சி.ஜி., கொரோனா பரிசோதனை உள்பட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பரிசோதனை முடிவில் உடல் திறன் கொண்டவா்களுக்கு தடுப்பூசி போடப்படும் முதற்கட்டமாக மாவட்ட முழுவதும் சுமார் 194 நபர்களுக்கு மருத்துவ குழுவின் மூலமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

Related Link
தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பறவைகள்

தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பறவைகள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக சார்பில் தேர்தல் பணிமனை ஆலோசனை கூட்டம்

2
10 hrs 33 mins agoshare
அமைச்சர் சேகர் பாபு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved