திருவாரூரில் ஒஎன்ஜிசி நிறுவனத்தை கண்டித்து போராடிய விவசாயிகள் மீது பொய் வழக்கு தொடுப்பதாக குற்றஞ்சாட்டி புதிய ரயில் நிலையம் முன்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2015ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தில் நிறுவனத்தின் சொத்தை சேதப்படுத்தியதாக விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் உட்பட இருவருக்கு 13 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து விவசாயிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இரண்டு பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.