Also Watch
Read this
By: Manigandan Raja

கோயில் உற்சவ பெருவிழா :
சிவகங்கை மாவட்டம் பிரண்டை குளம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ செந்தில் ஆண்டவர் திருக்கோவிலில் தை மாத உற்சவ பெருவிழாவை முன்னிட்டு பால்குட வைபவம் நடைபெற்றது காப்பு கட்டி விரதம் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து முருகப்பெருமானை வழிபாடு செய்தனர்.
முன்னதாக சுவாமி சன்னதி முன்பு யாக குண்டம் மற்றும் புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை வைத்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் துவங்கியது பல்வேறு ஹோமங்கள் நடைபெற்று சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன.
தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் செந்தில் ஆண்டவர் சுவாமிக்கு பல்வேறு நறுமண திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடங்கள் எடுத்து கிராமத்தை சுற்றி வலம் வந்து கோவிலை அடைந்து முருகப்பெருமானுக்கு சமர்ப்பித்தனர்.
பக்தர்கள் சமர்ப்பித்த பால் கொண்டு முருக பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து வண்ண மலர் மாலைகள் சாற்றி சர்வ அலங்காரமும் சிறப்பு பூஜைகளும் தீப ஆராதனையும் காண்பிக்கப்பட்டன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானே வழிபாடு செய்தனர் விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved