Also Watch
Read this
By: Web Team

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, 4ஆவது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் தேதி தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே 4 விசைப்படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved