Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள கிளன்ராக் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையை பிடிப்பதற்காக, வனத்துறையினர் கூண்டு அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சமீப காலமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் நுழையும் சிறுத்தை, வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை வேட்டையாடி செல்வது தொடர்கதை ஆகியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் கிளன்ராக் பகுதியில் மட்டும் 8 வளர்ப்பு நாய்களை சிறுத்தை வேட்டையாடியதால், வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க முயற்சித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved